சான்ஸ் கிடைக்கலயாமா...? ரிக்ஷா ஓட்டும் டப்ஸ்மேஷ் மிருணாளினி!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:04 IST)
டப்ஸ்மேஷ் செய்து அனைவரையும் கவர்ந்த மிருணாளினி ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகினார். தற்போது அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஃபேஸ்புக்கில் தற்போது தனது டப்ஸ்மேஷ் வீடியோ பதிவேற்றம் செய்ய தனி பக்கம் ஒன்றை உருவாக்கி மேலும் பிரபலமடைந்தார்.

அழகான முகபாவனை மூலம் டப்ஸ்மேஷ் செய்து ஃபேஸ்புக்கில் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர். டப்ஸ்மேஷ் எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தாலும். அதை ரசிப்பதற்கென்று தனி கூட்டமே உருவாகியது. அத்துடன் கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி படவாய்ப்புகளை பெற்றார்.

தெலுங்கில் கடலகோண்ட கணேஷ், தமிழில் சாம்பியன் , சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் தற்ப்போது  ரிக்ஷா ஓட்டுவது போன்று போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், என்னமா  படவாய்ப்பு இல்லாததால் ரிக்ஷா ஒட்டி கல்லா கட்டுறியா என நக்கலடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#RickshawKari

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்