நடிகர் ரஜினியின் டிஸ்சார்ஜ் ??? மருத்துவமனை முக்கிய தகவல்

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (18:31 IST)
உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் ரஜினியின் டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாத்தா சூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, ரஜினி தனிமைப்படுத்திக்கொண்டார்.

அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ரஜினியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை   முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்