வெப்சீரிஸாக தியாகராஜ பாகவதரின் பயோபி்க்… இயக்குனர் வசந்த் முன்னெடுப்பு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (15:54 IST)
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தியாகராஜ பாகதவர். இவர் நடித்த ஹரிதாஸ், அசோக்குமார் மற்றும் பவளக்கொடி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்று, விடுதலை செயப்பட்டபின் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைய, தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றார்.

அப்படிபட்ட நடிகரான தியாகராஜ பாகவதரைப் பற்றி இப்போதுள்ள தலைமுறையினருக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இயக்குனர் வசந்த் தியாகராஜ பாகவதரின் பயோபிக்கை வெப் தொடராக எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்