விஜய் ஆண்டனியின் உடல்நிலை எப்படி இருக்கிறது: இயக்குனர் சுசீந்திரன் தகவல்

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:36 IST)
மலேசியாவில் பிச்சைக்காரன் 2 என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய் ஆண்டனி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி கொண்டு இருக்கும் நிலையில் இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்
 
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சென்னை வந்துவிட்டார் என்றும் அவர் ஓய்வில் இருக்கிறார் என்றும் விரைவில் அவர் தனது உடல்நலம் குறித்து வீடியோ மூலம் ரசிகர்களிடம் உரையாடுவார் என்றும் கூறினார் 
 
மேலும் விஜய் ஆண்டனி குறித்து வெளியாகி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் சுசீந்திரம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்