விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் உள்ள ஒரு தீவில் நடந்துள்ளது. அதில் கடல் பகுதியில் வாட்டர் ஸ்கூட்டியில் அவரும் கதாநாயகியும் செல்வது போன்ற காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்போது விஜய் ஆண்டனி ஓட்டிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு படகின் மீது மோதி, கடலில் கவிழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கடலில் விழுந்ததால் கடல் தண்ணீரை குடித்ததால் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.