விஜய்யுடன் இணைந்த இயக்குநர் செல்வராகவன் !

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின்3 ஆம் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சமீபத்தில் சாக்கோ இணைந்துள்ள நிலையில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவனுடன் முதன்முதலின் இணைந்து நடிக்கவுள்ளார் செல்வராகவன். இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடித்து வரும் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
மேலும், விஜய்யின் பீஸ்ட் படம்  அடுத்த ஆண்டு ( 2022) கோடை காலத்தில்( ஏப்ரல்_ மே) வெளியாகலாம் எனவும், வேகமாகப் படப்பிடிப்புகள் முடிந்தாலும், அடுத்து, போஸ்ட் புரொடெக்சன் இசைக் கோர்ப்பு பணிகள் முடிவடைய இன்னும் 3 மாதம் காலமாகும் என்பதால் இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிடுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்