ஸ்டண்ட் மாஸ்டரிடம் பயிற்சி மேற்கொள்ளும் விஜய் சேதுபதி மகன்! வைரலான வீடியோ!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:24 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஏற்கனவே சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும் இன்னொரு பெண் குழந்தையும் உள்ளார். இந்நிலையில் சூர்யாவுக்கும் தந்தையைப் போலவே நடிப்பதில் ஆர்வ, என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவான சிந்துபாத் திரைபடத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதுவும் இல்லாமல் பையன் குண்டாக இருப்பதாகவும் கேலிகள் எழுந்தன.

இந்நிலையில் சூர்யா இப்போது பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் ஸ்டண்ட் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாராம். அது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனிப்பைப் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்