ரஜினியைக் கலாய்க்கும் விதமாக மேடையில் பேசிய இயக்குனர் ரத்னகுமார்!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (07:05 IST)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்நிலையில் இந்த மேடையில் இயக்குனரும் லியோ படத்தின் வசனகர்த்தாவுமாகிய ரத்னகுமார் பேசிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர் மேடையில் பேசும்போது “கழுகு எவ்வளவு மேல பறந்தாலும் பசிச்சா சாப்பிட கீழ வந்துதான் ஆகணும்” எனப் பேசியது ரஜினி ரசிகர்களை சீண்டியது போல உள்ளது எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக ஜெயிலர் படத்தின் ஆடியோ ரிலீஸின் போது பேசிய ரஜினி “ காட்டுல கழுகு மேல பறந்துட்டே இருக்கும். அதப் பார்த்து காக்காவும் மேல பறக்க ஆசைப்படும். ஒரு கட்டம் வரைதான் காகம் வரும். ஆனால் கழுகு அடுத்த கட்டத்துக்கு போய்க்கொண்டே இருக்கும். காகம் அடுத்தவர்களுக்கு தொல்லைக் கொடுக்கும். ஆனால் கழுகு யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் பறந்துகொண்டே இருக்கும்” எனக் கூறியிருந்தார். அப்போது ரஜினி விஜய்யைதான் காகம் என சொல்வதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்