ஹரி& விஷால் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (10:20 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை.

சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்தபடத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஆறு, சிங்கம், சிங்கம் 2, வேங்கை மற்றும் சாமி 2 ஆகிய படங்களில் ஹரியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்