செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

Siva
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (15:19 IST)
நடிகர் விஜய் செல்பி எடுப்பதற்கு முன்னர் என்னிடம் அனுமதி கேட்டார். அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமானவர் என்று சமீபத்தில் இயக்குனர் பாலா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷனுக்காக பல ஊடகங்களில் பாலா பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில், ஒரு ஊடகத்திற்கு அவர் பேட்டி அளித்த போது, விஜய் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய பாலா, "விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது இதை கேட்பதால் நான் ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

ஒருமுறை என் குழந்தையுடன் நான் நடிகர் விஜய் அவரது மனைவி சந்தித்தபோது, அங்கு என் குழந்தை அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. என் குழந்தையுடன் செல்பி எடுக்க கேமராவை ஆன் செய்து விட்டார் விஜய். இருப்பினும், 'ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா?' என்று என்னிடம் அனுமதி கேட்டார். அந்த அளவு ஒழுக்கமானவர் விஜய்," என்று கூறினார்.

அவருடைய இந்த பதில், விஜய் ரசிகர்களின் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்