அட்லியுடன் இணைந்த அர்ஜுன் தாஸ்! உருவாகிறது புது காம்போ!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:23 IST)
இயக்குனர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக ஒரு படம் நடிக்க இருக்கிறார்.

மாஸ் ஹீரோக்களை வைத்து பிரம்மாண்டமாக உப்புச் சப்பில்லாத கதைகளை வெற்றி படமாக மாற்றும் வித்தை அறிந்தவர் இயக்குனர் அட்லி. இப்போது அவர் ஷாருக் கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரின் A for Apple நிறுவனம்  தயாரிக்கும் புதிய படத்தில் தமிழ் சினிமாவின் மிரட்டலான வில்லன் எனப் பெயர் பெற்றுள்ள அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கிறார்.

கைதி படத்தின் மூலம் மக்கள் மனதில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அட்லி தயாரிப்பில் இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்