இந்த தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் பிரம்மாண்டமாக வெளியாகியது. இப்படத்துடன் மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2, கொடிவீரன், போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் வெளியானது. இந்த படங்களும் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மேயாத மான் படம் பார்த்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் படம் சூப்பர், இப்படி நான் சிரித்து பல நாட்கள் ஆகிறது என்று டுவீட் செய்துள்ளார். அதோடு படக்குழு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'. ரத்தின குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா ஷங்கர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' தற்போது தமிழ் திரையுலகிலும் படத்தயாரிள்ளது.
இப்படத்துக்கு விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்கள்.