ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, டாஸ்மாக்கில் விற்பனை எகிறும். எனவே, ஒவ்வொரு வருடமும் அரசு இலக்கு வைத்து மது விற்பனையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக்கில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீத விற்பனை குறைந்து விட்டது தெரியவந்துள்ளது. கடந்த வருட தீபாவளியன்று ரூ.150 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆனது. ஆனால், இந்த வருடம் ரூ.135 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. அதேபோல், தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்.17ம் தேதி ரூ.97 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது.