இன்னும் ஷூட்டிங்கே முடியல, அதுக்குள்ள ரிலீஸ் தேதியா?

சனி, 21 அக்டோபர் 2017 (11:20 IST)
இன்னும் ஷூட்டிங்கே முடியாத படம், டிசம்பரில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
நடன இயக்குநராக இருக்கும் பாபா பாஸ்கர், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘குப்பத்து ராஜா’. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே வெளியான படத்தின் தலைப்பு இது. ஜி.வி.பிரகாஷ், ரா.பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு, மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷே இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நேற்று முன் தினம் தனுஷால் வெளியிடப்பட்டது. இன்னும் இந்தப் படத்தின் ஷூட்டிங்  முடியவில்லை. ஆனால், படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே போஸ்ட் புரொடக்‌ஷன் முடித்த படங்களே ரிலீஸாக முடியாமல், திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, ‘முதல்ல ஷூட்டிங்கை  முடிங்கப்பா... ரிலீஸைப் பத்தி அப்புறம் பேசிக் கொள்ளலாம்’ என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்