நான் நடிக்க ஆசைப்பட்டது இந்த இருவரின் பயோபிக்கில்தான்… ஒரு ஆசை நிறைவேறிடுச்சு- தனுஷ் பெருமிதம்!

vinoth
புதன், 20 மார்ச் 2024 (13:41 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். படத்தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் “நான் என் வாழக்கையில் இரண்டு பேரின் பயோபிக்கில்தான் நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா.இன்னொன்று ரஜினிகாந்த். அதில் இன்று ஒரு ஆசை நிறைவேறியிருக்கு.

எல்லோரும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜா பாட்டைக் கேட்டு தூங்குவார்கள். ஆனால் நான் எப்போது இவர் பயோபிக்கில் நடிக்கப் போகிறோம் என நினைத்து தூங்காமல் இருந்திருக்கேன். அவரின் பயோபிக்கில் நடிப்பதைக் கர்வமாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்