காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

vinoth
சனி, 30 நவம்பர் 2024 (08:11 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸாகி இளைஞர்களிடம் பெரியளவில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்