D43 படத்தின் தலைப்பு ’மாறன்’ ?

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (10:33 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு 'மாறன்' என்று தலைப்பு வைத்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
 
சமீபத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் பட அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அந்த வகையில் இந்த படத்திற்கு 'மாறன்' என்று தலைப்பு வைத்திருக்கின்றனர். இதே தலைப்பில் சத்யராஜ் வடிவேலு நடிப்பில் ஏற்கெனவே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்