நாளை வெளியாகிறது தனுஷ் 43 ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

செவ்வாய், 27 ஜூலை 2021 (12:06 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் பட அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்