பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன பெண் போட்டியாளர்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:15 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் விலகிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற தனலட்சுமி வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த வாரம் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சனிக்கிழமை நிகழ்ச்சியில் சேவ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது
 
தனலட்சுமி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் வீட்டில் தைரியமாக அனைவரையும் கேள்வி கேட்டு தனது மனதிற்கு தோன்றியபடி விளையாடி வந்த நிலையில் தற்போது அவர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் சுவாராஸ்யம் குறைந்து போகுமா என்பதை போகப்போக தான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்