இவர் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார். வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி, "என்னை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி...!! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்... இந்த நாட்களில் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னிக்கவும்... இந்த நிமிடம் முதல் என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உங்களை மகிழ்விப்பேன்..! என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது வழக்கம் போலவே ஹோம்லி லுக்கில் அழகான 4 போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து ரசனையில் மூழ்கி கமெண்ட்ஸ்களை அள்ளியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்க இல்லாமல் பிக்பாஸ் வீடே எம்டியா இருக்கு.. பார்க்கவே பிடிக்கல என்றெல்லாம் கூறியுள்ளார்.