விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கி இறுதியை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளைப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டும் டி ஆர் பி குறைவாக உள்ளதாகவே சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த காரணத்தாலும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் இருப்பதாலும், கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.