விஜய் பற்றி அட்லீ சொன்னது நீக்கம்.. ஜவான் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:55 IST)
ஜவான் திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குறித்து அட்லீ பேசிய காட்சிகள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயந்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜவான். தமிழ், தெலுங்கு, இந்தி என பேன் இந்தியா மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. அதில் பேசிய இயக்குனர் அட்லீ தனது இந்த உயர்வுக்கு விஜய் அண்ணாதான் காரணம் என பேசியிருந்தார். அந்த தகவல் அப்போதே சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஜவான் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பானது.

ஆனால் அதில் அட்லீ விஜய் குறித்து பேசிய காட்சிகள் இடம்பெறவில்லை. முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சூப்பர் ஸ்டார் என்றுமே ரஜினி மட்டும்தான், அவரது இடத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கலாநிதி மாறன் பேசியிருந்தார். அவர் விஜய்யைதான் மறைமுகமாக பேசுகிறார் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது

இந்நிலையில் தற்போது ஜவான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் திட்டமிட்டே விஜய் பற்றி பேசிய காட்சிகள் நீக்கப்பட்டதா என்று சமூக வலைதளங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.

ஆனால் தகவல்களின்படி, ஜவான் நிகழ்ச்சி வீடியோவை தொலைக்காட்சி நிறுவனம் எடிட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 2 மணி நேரம் ஒளிபரப்ப ஸ்லாட் ஒதுக்கீடு மட்டும் செய்யப்பட்டதாகவும், பட நிறுவனம் தரப்பிலேயே எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பிற்கான வீடியோ அளிக்கப்பட்டதாகவும் இதில் திட்டமிட்ட அரசியல் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்