எனக்கு நீங்க ஃபேனா? ரொம்ப நன்றி தளபதி! – விஜய்க்கு நன்றி சொன்ன ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்!

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:10 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டனின் “ஈக்குவலைசர் 3” படத்தை நடிகர் விஜய் பார்த்த நிலையில் விஜய்க்கு நன்றி சொல்லியுள்ளார் டென்சல்.ஹாலிவுட்டில் 80களில் இருந்து பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டென்சல் வாஷிங்டன். இவர் நடித்து வெளியான ஈக்குவலைசர் பட வரிசைக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் விஜய்யும் ஒருவர் என்பது சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது.

ஈக்குவலைசர் படத்தின் 3வது பாகம் நேற்று அமெரிக்காவில் ரிலீஸானது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் விஜய் சென்றிருந்தார். டேன்சல் வாஷிங்டனின் நடிப்பை ஒரு ரசிகராக ரசித்து பார்த்துக் கொண்டிருந்த விஜய்யை இயக்குனர் வெங்கட் பிரபு போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து விட பற்றிக் கொண்டுள்ளது சோசியல் மீடியா.

நடிகர் விஜய் தனது படத்தை ரசிக்கும் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள டென்சல் வாஷிங்டன் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்