ஒரே நாள்ல 3 ட்ரெய்லர் ரிலீஸ்.. ஆனா ஹிட் அடிச்சது மார்க் ஆண்டனி..!?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (11:11 IST)
நேற்று தமிழ் சினிமாவின் முக்கியமான மூன்று படங்களின் ட்ரெய்லர் வெளியான நிலையில் எந்த பட ட்ரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என பார்க்கலாம்.



ஜெயம் ரவி, நயந்தாரா நடிப்பில் அகமது இயக்கியுள்ள படம் இறைவன். ஒரு சைக்கோ கொலைகாரனை தேடும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி இதில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் படமான போர் தொழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த பட டிரெய்லரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ட்ரெய்லரில் காட்டப்படும் இறந்த பெண்களின் உடல்கள், கொலை காட்சிகள் மென்மனது கொண்டவர்களுக்கு உகந்ததாக இருக்காது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 ட்ரெய்லரும் நேற்று வெளியானது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். சந்திரமுகி படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி பார்வையாளர்கள் கவனத்தை சந்திரமுகி 2 மேலும் திருப்பியுள்ளது. ஆனால் ட்ரெய்லரில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் சிரிப்பை அவ்வளவாக ஏற்படுத்தவில்லை. ஆனால் சந்திரமுகி, வேட்டையன் ராஜா இடையேயான பகை பற்றி காட்டப்படுவதால் எதிர்பார்ப்பு உள்ளது.

இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி. டைம் ட்ராவல் + கேங்க்ஸ்டர் கதை என கலந்து கட்டி வந்திருக்கிறது. ட்ரெய்லரில் எஸ்.ஜே.சூர்யாவின் வசன காட்சிகள், காமெடிகள் பெரும்பான்மையோரை கவர்ந்துள்ளன. ட்ரெய்லரில் இடம்பெற்ற பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி ரீமிக்ஸ் பாடலும் ஹிட் மெட்டீரியலாக தெரிகிறது. சோசியல் மீடியாக்களில் இந்த வீடியோக்கள் இப்போதே ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ட்ரெய்லர் ஒப்பீட்டளவில் மார்க் ஆண்டனி அதிக கவனம் ஈர்த்திருந்தாலும் படங்கள் வெளியாகும்போதுதான் அதன் உண்மையான வெற்றி தெரிய வரும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்