அறிமுக இயக்குனரின் திருவிழா கதையான திரைப்படம்"மா ட ன்"

J.Durai
சனி, 19 அக்டோபர் 2024 (17:38 IST)
நெல்லை மாவட்டத்தில்  ஒரு கிராமத்தில்  இருக்கும் சுடலைமாடன் கோவிலில் பல வருடங்களாக கோவில் திருவிழா நடை பெறாமல் இருக்கிறது அதை நடத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் கதாநாயகன் களம் இறங்குகிறான்.
 
அதனால் பல எதிர்ப்புகளை சந்திக்கிறான். தொடர்ந்து  அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெறுகிறது. அவனுடைய இந்த முயற்சிக்கு  அவனின் காதலியும் துணை நிற்கிறாள். இதனால் இருவருக்கும்  இடையில் பிரச்னைகள் ஏற்படுகிறது.  
 
அந்த தடைகளை தாண்டி அவன் கோவில் திருவிழாவை நடத்தினானா? என்ற கருவை வைத்து இந்த மாடன் படம் உருவாகி வருகிறது.
 
தெய்வா புரொடக்சன்ஸ் சார்பில் " மாடன்" என்ற பெயரில் வளரும் இதை தனது கனவுப்படமாக கப்பலில் கேப்டனாக பணி புரிந்த சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிக்கிறார்.
 
இளம் நாயகனாக கோகுல் கௌதம் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக ஷார்மிஷா நடிக்கிறார். 
 
மேலும் இதில் டாக்டர் சூரியநாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஸ்ரீ பிரியா ஆகியோருடன்,  திருநங்கை ரஸ்மிதாவும் நடிக்கிறார்.
 
சின்ராஜ் ராம் ஒளிப்பதிவையும், விபின்.ஆர். இசையையும்,  ரவிசந்திரன் .ஆர். படத்தொகுப்பையும்,  வே. ராமசாமி, கார்த்திக் கிருஷ்ணன் பாடல்களையும், நெய்வேலி பாரதிகுமார், ஒரு பாடலையும், வசனமும் எழுதி இருக்கிறார். மாஸ்மோகன் சண்டை பயிற்சியையும் , 
ராக்சங்கர் நடன பயிற்சியையும் , குட்டி கிருஷ்ணன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல குறும்படங்களை இயக்கி உள்ள இரா. தங்கபாண்டி இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல்படமாக டைரக்ட் செய்து வருகிறார்.
 
படத்தைப் பற்றி பேசி அவர் கூறியதாவது.....
 
இது நெல்லையில் இதில் கள்ளமில்லா வெள்ளை உள்ளத்து காதலர்களின் கம்பீர கதையையும் சேர்த்து மதங்களை தாண்டிய மனிதர்களின் உணர்வால் ஊரை ஒன்றிணைத்த வல்லவனான மாடனின் கோவில் திருவிழா கதை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு எல்லைச்சாமி உண்டு. 
 
அதற்கு ஒரு வரலாறும் உள்ளது. அதை மக்களுக்கு பிடித்த மாதிரி திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக உருவாக்கி இருக்கிறேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்