மக்கள் செல்வி வரலக்ஷ்மியின் "டேனி" டீஸர் வெளியானது!

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (15:40 IST)
தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகர் வரலக்ஷ்மி. போல்டான நடிகையாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது வரவும் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டபெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
தார தப்பட்டை, சண்டக்கோழி, நீயா 2 , சர்க்கார் போன்ற படங்களில் நடித்து தனது கதாபாத்திரத்தை மக்களின் அவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தற்போது இவர் டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 
 
சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்