விஜய் குறித்து என்ன பேசினார் டேனியல் பாலாஜி ? பரபரப்பு தகவல்

திங்கள், 23 செப்டம்பர் 2019 (20:19 IST)
சமீபத்தில் நடைபெற்ற பிகில் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் தன் பேச்சில் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கபட வேண்டுமென பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரபில் இருந்து எதிர்ப்பும், எதிர்க்கட்சி தரப்பில் இருந்து ஆதரவும் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அதே மேடையில், அப்படத்தில் நடித்துள்ள டேனியல் பாலாஜியும் பேசினார். 
ஆனால், அவர் பேசிய வார்த்தைகளை சன் டிவி கட் செய்து வெளியிட்டது. அதனால் டேனியல் பாலாஜி என்ன பேசினார் என்பது தெரியாமல் விஜய் ரசிகர்கள் தவித்தனர்.
 
இந்நிலையில், இன்று நடிகர் டேனியல் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில், பிகில் ஆடியோ விழாவில் தான் பேசியதை, சன் டிவி கட் செய்த வசனங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், ’ என் உரையில் நான் சொன்னது, விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவலர், எனக்கு ஒரு நல்ல நண்பர் பெற்றோருக்கு  ஒரு நல்ல மகன் அதேபோல்..’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் என டேனியல் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்