நான் ஏன் காந்தியைக் கொன்றேன் படத்துக்கு தடை விதிக்க முடியாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:07 IST)
நான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்ற திரைப்படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னால் பல சதித்திட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோட்சேவை ஹீரோவாக்கும் வேலை வட இந்தியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30 ஆம் தேதி ஓடிடியில் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற கோட்சேவின் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் தொடர்பான திரைப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் மகாராஷ்டிரா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம் பி யான அமோல் கோல்ஹே நடித்திருந்தார். அவருக்கும் இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், ஆர்ட்டிகிள் 226ன் படி உயர்நீதிமன்றத்தை அனுகலாம் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்