பாஜக தனது வாழ்நாளில் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது: ராகுல் காந்தி

புதன், 2 பிப்ரவரி 2022 (19:27 IST)
பாஜக ஒருபோதும் தனது வாழ்நாளில் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 தமிழகத்தில் தாமரை மலராது என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏக்கள் பாஜகவினர் வென்று உள்ளனர் என்பதும் படிப்படியாக பாஜகவினர் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியாக வர வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிய போது பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்றும் உங்களால் அதை சாதிக்கவே முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்