ராமராஜன் படத்தை தடை செய்ய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (21:06 IST)
நடிகர் ராமராஜன் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள 'சாமானியன்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012ல் இதே தலைப்பை படத்திற்கு பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதால், இந்த படத்தை வெளியிட தடை கோரி ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும்,  ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே
 
நடிகர் ராமராஜன் கடந்த 2012 ஆம் ஆண்டு ’மேதை’ என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு 10 ஆண்டுகளுக்கு பின் நடிக்கும் திரைப்படம்  ’சாமானியன்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் அவை வைரலானது.
 
நூலகத்தில் அத்துமீறி நுழையும் ராமராஜன், ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் அந்த நூலகரை பணயமாக வைத்துக் கொண்டு மிரட்டுவது அதன் பின்னர் துப்பாக்கியால் அந்த நூலகரை சுட்டுக் கொள்வதும் இந்த படத்தின் கதை என தெரிகிறது. கார்த்திக் குமாரின் கதையில் ராஹேஷின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமானியன்’ திரைப்படத்திற்கு  அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்த படத்தை மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்