சினிமாவில் இருந்து விலகும் நடிகை நயன்தாரா? ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (19:38 IST)
நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகப் போவதாகத் தகவல் வெளியாவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவருமான நயன்தாரா, ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அதன்பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

கடந்த ஆண்டு, அவரது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு கொண்டார்.

இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் நயன் தாராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில்,  இனிமேல்,குழந்தைகளைப் பார்க்க வேண்டி, ஏற்கனவே கமிட் ஆன படங்களில்  நடித்து முடித்துவிட்டு, விரைவில் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி, தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகிறது.

நயன்தாரா  நடிப்பில், காத்துவாக்குல ரெண்டு காதல், ஓ2 ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது,  சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற இந்திப் படத்தில் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்