சிவசேனா கட்சி விவகாரம்.. இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..!
புதன், 22 பிப்ரவரி 2023 (17:11 IST)
சிவ சேனா காட்சி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
உத்தவ் தேக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்து சில மாதங்களுக்கு முன்னால் திடீரென இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர்தான் உண்மையான சிவசேனா கட்சி என சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது
மேலும் அந்த கட்சிக்கு சிவசேனாவின் கட்சி கொடி பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தவ் தேவ் தாக்கரே தரப்பு இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து பதிலளிக்க ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது