பிக்பாஸ் பிரபலம் கேப்ரியாவுக்கு கொரொனா !

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (18:35 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் கேப்ரியா கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சென்னையில் ஒருநாள், என்றென்றும் புன்னகை, அப்பா போன்ற படங்களில் நடித்தவர் கேப்ரில்லா.   இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

இவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது  இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளதாவது? நான் அனைத்துப் பாதுகாப்பு முறைகளைக் கடைபித்தும்கூட எனக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நான் நலமுடன் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்