சமீபத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என பலரும் அந்த போஸ்டர் குறித்து விமர்சனங்களை வைத்தனர். அதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் ஒருவர்.
ஆனால் அடுத்த சில நாட்களில் அதே படத்தின் நா ரெடிதான் பாடல் வெளியானது. அதில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் வாயில் சிகரெட்டோடுதான் தோன்றினார். இது பலபேரை மேலும் முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில் விஜய்யின் மீது சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற சமூகநல ஆர்வலர் போத பொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் ”போதை பொருள் பழக்கத்தை ஆதரிப்பதகாவும் ரௌடியிசத்தை தூண்டுவதாகவும் அந்த பாடல் இருப்பதாகவும்” தனது குற்றச்சாட்டில் கூறியுள்ளார்.