சென்னை வரும் சன்னிலியோன்; எப்போது எதற்காக தெரியுமா?

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (11:14 IST)
ஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர்  ஏராளமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். ‘ஜிஸ்ம் 2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.

 
தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார். சமீபத்தில் கூட கேரளா சென்ற சன்னிலியோனை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கொச்சியே  ஸ்தம்பித்தது. பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் 'இந்திரஜித்'  படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் செய்திகள்  வெளிவந்தது.
 
இந்நிலையில் தற்போது சன்னிலியோன் சென்னை வர இருக்கிறார். வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில்  இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக்கிறாராம். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்