ரம்ஜான் ரிலீஸில் இருந்து விலகும் கோப்ரா!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (16:37 IST)
விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகாது என சொல்லப்படுகிறது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையி இன்னும் பணிகள் முடியாத காரணத்தால் இரண்டு மாதங்கள் தள்ளி ஜூலை மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்