கோப்ரா தோல்வியால் உச்சகட்ட கடுப்பில் தயாரிப்பாளர்… எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:49 IST)
கோப்ரா படத்தின் தோல்வியா இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கடுமையான கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. முதல் நாளில் சுமார் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த நாட்களில் வசூல் சுத்தமாக படுத்துவிட்டதாம். இதனால் அடுத்தடுத்த நாட்களில் 3 கோடி ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. முதல் 3 நாட்களில் சுமார் 13 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது தயாரிப்பாளர் லலித் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ரெட் விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்