அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

vinoth
வெள்ளி, 24 ஜனவரி 2025 (18:25 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர் என்ற திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும் மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த படம் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரீமேக்கில் பல மாற்றங்களை செய்ததால் படம் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை.

இந்நிலையில் தெலுங்கில் தற்போது தொடர்ந்து அதிரி புதிரி ஹிட்களைக் கொடுத்து வரும் இளம் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்த படம் சிரஞ்சீவிக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்