துணிவு படத்தில் நடித்துள்ள பக்ஸ்… கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:27 IST)
துணிவு படத்தில் காவல்துறை அதிகாரியாக பக்ஸ் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் படங்களுக்கு பெரியளவில் ப்ரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இந்த முறை துணிவு படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் ப்ரமோஷன்களை செய்கிறது வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம். இந்நிலையில் இப்போது படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ஜிகர்தண்டா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பக்ஸ் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். அவர் ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள நிலையில் அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்