நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (15:36 IST)
நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் சாரா அலிகான் ஆகியோருடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கும் அத்ரங்கி ரே.

இப்படத்தை ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கிவருகிறார். இத்திரைப்படம் கொரொனா ஊரடங்கு காரணமாக 200 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில் கடந்த  5 ஆம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.

இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தனுஷ் , கேமராவை அணைத்தப்படி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சமூக வலைதளத்தி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை அபிராம புரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு  வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஸ்னிப்பர் நாய்கள் மற்றும் பாம்ப் ஸ்குவாட்  தனுஷ்  வீட்டுக்குற் வந்து சோதனையிட்டு வருகின்றனர்.

மேலும் விஜயகாந்த் வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தவரும் இதே நபர் என்ற கோணத்தில் இந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ரஜினி, கம் விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்