கொரோனாவால் தனிமைப்படுத்த வீட்டில் கொள்ளை – நூதன சம்பவத்தின் மூளை யார் தெரியுமா?

செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:12 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் கொள்ளை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் பொறியாளர் நூருல் ஹக். இவர் துபாயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது மனைவியும் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வீட்டில் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தம்பதிகளுடன் மொய்தீன் மற்றும் முஸ்தபா என்ற உறவினர்களும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் 250 பவுன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கைக்கடிகாரம்  ஆகியவை கொள்ளை போயின. இது சம்மந்தமாக போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதே மொய்தீன்தான் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மொய்தீன் மும்பைக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி போலீஸார் மும்பைக்கு சென்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்