சவூதி அரேபியாவில் களமிறங்கும் பிளாக் பேந்தர்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (18:45 IST)
35 வருடங்களுக்குப் பிறகு சவூதி அரேபியாவில் முதல் தியேட்டர் திறக்கப்பட இருக்கிறது.

 
மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இருப்பதால், 1980களில் சவூதி அரேபியாவில் இருந்த தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு அங்குள்ள மக்களுக்குத் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.
 
சவூதி அரேபியாவின் இளவரசனாக முகமது பில் சல்மான் பதவியேற்றபிறகு, அங்கு பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொழுதுபோக்குத் துறையில் உள்ள சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு அங்கு முதல் தியேட்டர் திறக்கப்பட இருக்கிறது.
 
ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தியேட்டர் திறக்கப்படுகிறது. ஹாலிவுட் பிளாக் பஸ்டர் படமான பிளாக் பேந்தர் முதல் படமாகத் திரையிடப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்