சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்கு அனுமதி வழங்க சவுதி அரசு தற்பொழுது முடிவு செய்தள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் சவுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.