பிரேம்ஜிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் 3 நடிகை: டைட்டில் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (07:19 IST)
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரேஷ்மா, பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
 
 விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் அடுத்த படம் ‘சத்திய சோதனை’.
 
இந்த படத்தின் நாயகனாக பிரேம்ஜி நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் ரேஷ்மா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் ‘புஷ்பா’ கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூலான சத்தியசோதனை என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அம்சமாக கொண்ட ஒரு கதை என்றும், இறுதியில் ஒரு சமூக கருத்தை அழுத்தமாக தெரிவிக்கும் படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்