அனிதா சம்பத் தந்தை காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:19 IST)
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகி அனிதா சம்பத் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆரியிடம் தனது கணவர் குறித்து பேச வேண்டாம் என்று அவர் ஆத்திரமாக பேசியதே அவரது வெளியேற்றத்திற்காக காரணம் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அனிதா சம்பத் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென அவரது தந்தை இன்று காலை காலமாகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அனிதாவின் தந்தை சம்பத் அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் காலமானதாகவும் கூறப்படுகிறது
 
சம்பத் அவர்களின் மறைவு அனிதாவின் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 80 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த அனிதா சம்பத் தற்போதுதான் குடும்பத்துடன் இணைந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு இந்த மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனிதாவுக்கு அவரது ஆர்மியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்