பழைய பாலாவை காணோம்... ஓரமா உட்கார்ந்து புறம் பேசும் ரியோ - சோம்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (14:09 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த 5 வது டாஸ்க்கில் போட்டிப்போட்டு விளையாடிய ஹவுஸ்மேட்ஸ் நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கினர்.
 
இதில் ரியோ வெற்றி பெற்றார். எல்லோரும் ஷிவானி தான் டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த அதிர்ஷம் யாருக்கு வைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், டாஸ்க் கொஞ்சும் டைட்டிலுக்கு தகுதியானவையாக கொடுத்தால் நல்லா இருக்கும்.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பாலாவை குறித்து ரியோ மற்றும் சோம் இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து " பழைய பாலாவை காணோம்... பழைய பாலாவை காணோம் " என சொல்லி சொல்லியே அவனை கெடுத்துட்டாங்க. அதனால் தான் அவன் எப்போதும் சண்டை போட்டே தன் பெயரை கெடுத்துக்கொண்டான் என புறம் பேசிக்கொள்கின்றனர். அது என்னமோ சரி தான்... ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாலாவின் நண்பர் வந்து போனதில் இருந்து பாலா ஓவராக உதார் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்