முன்னணி மலையாள மற்றும் தமிழ் நடிகையான பாவனா சில ஆண்டுகளுக்கு முன்னர், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் திலிப் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு பாவனா திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதன் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “அசல் படதுக்குப் பிறகு ஏன் எனக்கு தமிழ் சினிமாவில் இருந்து அடுதத்டுத்த வாய்ப்புகள் வரவில்லை என்று தெரியவில்லை. எனக்கு சினிமாவில் வழிகாட்டிகள் இல்லை. அதே போல நானும் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்தேன். நிறையப் பேர் என்னைப் பார்க்கும் போது எங்கள் படத்துக்கு கதாநாயகியாக உங்களைதான் நடிக்க வைக்க நினைத்திருந்தோம்” என்று சொல்கிறார்கள்.