பட்டப்பகலில் காரில் வலுக்கட்டாயமாக இளம்பெண்ணையும் அவரது கணவரையும் ஏற்றும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த பெண்ணின் பெற்றோர், சகோதரர், சகோதரி உட்பட ஆறு பேர் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அவர்களது வீட்டுப் பெண் காதலித்ததாகவும், ஏழு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அந்த பெண்ணையும் அவரது கணவரையும் மீட்ட போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.