’’பாகுபலி ’’ஹீரோபோல் இந்திய ஹீரோவாகும் ’’ மாஸ்டர் விஜய்’’ !!!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (18:14 IST)
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் உலகளவில் ரிலீஸாகி பெரும்  வசூலைக்குவித்த படம் மாஸ்டர். இப்படத்தை ராஜமௌலி இயக்கினார். பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, மற்றும்  சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்தனர். இப்படத்திற்குப் பிறகு பிரபாஸிற்கு இந்திய அளவில் ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அவரது நடிப்பில் முதல் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதுள்ளதால் இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என படக்குழு கூறியுள்ளது.

மேலும், மாஸ்டர் பட டீஸர் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அவரது நடிப்பில் முதல் பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற மொழிகளில் டல் செய்யப்பட்டு வெளியாகிறது. பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாவதால், 100% ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என இன்று நடிகர் விஜய் தமிழக முதல்வரைக் கேட்டுகொண்டுள்ளார்.

ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு சிறப்பு அனுமதி காட்சி கேட்டு அனுமதி கோரினால் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ள நிலையில், இன்று இன்று விஜய் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளதாலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் சுப்பிரமணியமும் 100% ரசிகர்களின் வருகைக்கு அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளதுபோல் இதே கோரிக்கை விஜய் வைத்துள்ளதற்கு நலிவுற்றுள்ள தியேட்டர் அதிபர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதனால் விஜய்யின் மாஸ்டர் படம் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது.

தற்போது,தமிழகத்தில்  மீண்டும் முழு ஊரடற்கிற்கு பாதிப்பில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால் வரும் புதிய ஆண்டில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு ரத்தாகலாமென தெரிகிறது.

எனவே தமிழக திரையரங்குகளுக்கும் 100% ரசிகர்கள் அனுமதிக்கபடவேண்டும் என்பது தியேட்டர் அதிபர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் கூட. சமீபத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியானதால் கடும் அதிருப்தி அடைந்தனர் தியேட்டர் அதிபர்கள்.

சமீபத்தில் விஜய் ’’மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாகும் என உறுதியளித்துள்ளது என்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய பட்ஜெட் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது முந்தைய நாட்களைப் போல் மீண்டும் அவர்களுக்கு உற்சாகமடைந்துள்ளனர்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகும் மாஸ்டர் படம் தமிழைப் போல் மற்ற மொழிகளிலும் வெற்றியடைந்தால் மற்ற நடிகர்களின் படங்களும் அடுத்தடுத்து பான் இந்தியா படங்களாக வெளிவரலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்