’’அழகிய சூப்பர் ஸ்டார்.’’.முன்னணி நடிகையை வாழ்த்திய நடிகர் !!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (18:14 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன் நேற்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். எனவே அவருக்கு நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைதளத்தில் அழகான சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
 

தீபிகா படுகோன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அதைத் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்றைய தேதியில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் முன்ணனி நடிகர்களில் படங்களில் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ள நடிகையும்  அவர்தான்.
நேற்று தீபிகா படுகோன் தனது 35 வது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பாகுபலி ஹீரோ பிரபாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்டில் அழகான சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தீபிகா படுகோன் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள சரித்திர படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தனது அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார். அவருடைய பல போட்டொக்கள் பல மில்லியன் லைக்ஸை பெற்றுள்ள நிலையில் நடிகையின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்